எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற அக்டோபர் மாதம் 14-ந் தேதி முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்த நூற்றாண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆரின் பெருமையை விளக்கும் வகையில் பள்ளிகளுக்கு இடையேயான பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, கவிதை போட்டி ஆகிய போட்டிகள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வு கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் எம்.ஜி.ஆர். குறித்து ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டிகள் நடைபெற்றன.
இதில் பேச்சு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் டாக்டர் எம்.ஜி.ஆரின் ஆளுமைத்திறன், பொதுமக்களுக்கு செய்த நலத்திட்டங்கள், ஏழைகளுக்கு உதவிய விபரம், இரக்க குணம், அவரது திரைப்படங்களில் நாட்டு மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும், மாாணவ மாணவிகளுக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும், அளிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் பாடல் வரிகள் குறித்து பேசப்பட்டது.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்முருகன், மாவட்ட கல்வி அதிகாரிகள் தமிழ்ச்செல்வன், சந்தியா, முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் கபிலன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story