மக்கள் நீதிமன்றத்தில் 1,208 வழக்குகளுக்கு சமரச தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 1,208 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 10 Sept 2017 4:15 AM IST (Updated: 10 Sept 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,208 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியும், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய வழிகாட்டுதலின்படியும் தேசிய மக்கள் நீதிமன்றம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜீவானந்தம், விபத்து வழக்குகள் தீர்ப்பாய சிறப்பு மாவட்ட நீதிபதி சீதாராமன், குடும்ப நல கோர்ட்டு நீதிபதி சந்திரன், தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு மணி, சார்பு நீதிபதி சண்முகவேல், மாவட்ட உரிமையியல் நீதிபதி செகனாஸ்பானு, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் ஜீவாபாண்டியன், அல்லி, ஓய்வு பெற்ற நீதிபதி அஜீஸ் ஆகியோர் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்று வழக்குகளை விசாரித்தனர்.

1,208 வழக்குகளுக்கு தீர்வு

இதேபோல் தாலுகாக்களில் உள்ள நீதிமன்றங்களிலும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் வழக்குகளை விசாரித்தனர். மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், வழக்குதாரர்கள், வக்கீல்கள் திரளாக பங்கேற்றனர். விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், வங்கி வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகள் என மொத்தம் 2,392 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 1,208 வழக்குகளுக்கு ரூ.4 கோடியே 18 லட்சத்து 64 ஆயிரம் தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது. சமரச தீர்வு காணப்பட்ட வழக்குகளில் வழக்குதாரர்களுக்கு தீர்வுக்கான உத்தரவு நகல்கள் வழங்கப்பட்டன. 

Next Story