பட்டுக்கோட்டை அருகே சரக்கு வேன் மோதி 2 பெண்கள் படுகாயம்

பட்டுக்கோட்டை,
பட்டுக்கோட்டையை அடுத்த ஆலடிக்குமுளை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சுந்தராம்பாள் (வயது 40). அதே தெருவை சேர்ந்த நாகராஜ் மனைவி சின்னப்பொண்ணு (60). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று மாலை சஞ்சாய நகரில் உள்ள வார சந்தைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த சரக்கு வேன், அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுந்தராம்பாள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், சின்னப்பொண்ணு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித் புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரக்கு வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story