வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அசல் ஓட்டுனர் உரிமம் பெற கூட்டம் அலைமோதியது
திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அசல் ஓட்டுனர் உரிமம் பெறுவதற் காக கூட்டம் அலை மோதியது.
திருவாரூர்,
வாகன ஓட்டிகளுக்கு அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு வசதியாக நேற்று விடுமுறை நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் இயங்கும் என அரசு அறிவித்தது.
அதன்படி திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டது. அப்போது ஓட்டுனர் பழகுனர் (எல்.எல்.ஆர்), உரிமம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் ஆகிய பணிகள் நடைபெற்றது. இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அசல் ஓட்டுனர் உரிமம் பெற கூட்டம் அலைமோதியது. வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார் தலைமையில், வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வந்தவர்களிடம் ஆவணங்களை சரிபார்த்து சான்று அளித்தனர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார் கூறுகையில், அரசு உத்தரவின்படி வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி 100-க்கும் மேற்பட்டவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

Related Tags :
Next Story