திருவாரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 1 கோடியே 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


திருவாரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 1 கோடியே 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
x
தினத்தந்தி 10 Sept 2017 4:00 AM IST (Updated: 10 Sept 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 1 கோடியே 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூர்,

நீதிமன்றங்களில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வு செய்திட திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தலைமை தாங்கினார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். இதில் தலைமை குற்றவியல் நீதிபதி ராஜேந்திரன், குற்றவியல் நீதித்துறை நடுவர் குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன், வக்கீல்கள் சங்க தலைவர் மணிகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சமரசத்திற்குரிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள் ஜீவானம்சம் உள்பட 1,400 வழக்குகள் நீதிபதிகள் முன்னிலையில் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 89 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரம் இழப்பீடு வழங்கிட உத்தரவிடப்பட்டது.

மேலும் வங்கிகளில் கடன் பெற்று திரும்பி செலுத்தாதது சம்பந்தமாக 158 வழக்குகள் சமர தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.30 லட்சத்து 36 ஆயிரம் வராக்கடன் வங்கிகளுக்கு செலுத்தப்படுகிறது என சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கோவிந்தராஜன் தெரிவித்தார். 

Next Story