பிளஸ்–1 மாணவன் கையில் பிளேடால் அறுக்கப்பட்ட காயம் நீல திமிங்கலம் விளையாட்டின் விபரீதமா?
குலசேகரத்தில் பிளஸ்–1 மாணவன் கையில் பிளேடால் அறுக்கப்பட்ட காயம், நீல திமிங்கலம் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குலசேகரம்,
செல்போனில் ஆன்லைன் மூலம் விளையாடும் நீல திமிங்கலம் (புளூவேல்) விளையாட்டு வாலிபர்கள் மற்றும் மாணவ–மாணவிகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் மன நிலைக்கு தள்ளி வருகிறது.
தமிழகத்தில் பல பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், புதுச்சேரி வங்கி பெண் ஊழியர் உள்பட பலர் இந்த விளையாட்டால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மேலும் மாணவர் ஒருவர் தற்கொலையும் செய்து கொண்டார்.
குமரி மாவட்டத்தில் இந்த விளையாட்டின் விபரீதம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் குலசேகரம் நாகக்கோடு பகுதியில், பிளஸ்–1 மாணவன் ஒருவன் கை அறுபட்ட நிலையில், ரத்தம் சொட்ட... சொட்ட... நின்று கொண்டிருந்தான். அவனது கையில் பிளேடால் அறுக்கப்பட்ட காயம் இருந்தது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவரின் தந்தைக்கு தகவலை தெரிவித்தனர். அவர் அலறியடித்தபடி அங்கு ஓடி வந்தார்.
பின்னர் மாணவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மாணவனின் தந்தைக்கு இச்சம்பவம் குறித்து சந்தேகம் ஏற்பட்டது.இதனால் அவர் இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் மாணவனிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர். மேலும், நீல திமிங்கலம் விளையாட்டால் மாணவர் கையை பிளேடால் அறுத்துக்கொண்டானா? என்றும் விசாரித்தனர்.
ஆனால், அந்த மாணவர் போலீசாரிடம், வீட்டில் இருந்து டியூசனுக்கு புறப்பட்ட போது ஒரு வாலிபர் பின்தொடர்ந்து வந்து கையை பிளேடால் அறுத்துவிட்டு ஓடியதாக தெரிவித்தார். மேலும், போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், நீல திமிங்கலம் விளையாடும் ஆன்லைன் வசதி கொண்ட செல்போன் மாணவனிடம் இல்லை என்பது தெரிய வந்தது. இருந்தாலும் மாணவனின் கையை அறுத்து வாலிபர் யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story