எடப்பாடி பழனிசாமி அணி பிரதிநிதிகள் பெங்களூரு வருகை


எடப்பாடி பழனிசாமி அணி பிரதிநிதிகள் பெங்களூரு வருகை
x
தினத்தந்தி 10 Sept 2017 5:16 AM IST (Updated: 10 Sept 2017 5:16 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி அணி பிரதிநிதிகள் பெங்களூருக்கு வருகை தந்து உள்ளனர்.

பெங்களூரு,

சென்னையில் வருகிற 12–ந்தேதி மதுசூதனன் தலைமையில் பொதுக்குழு நடைபெறுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. பெங்களூரு மாவட்ட முன்னாள் செயலாளர் எஸ்.டி.குமார் ஏற்பாட்டில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அசோக்குமார், கிருஷ்ணகிரி நகராட்சி முன்னாள் தலைவர் தங்கமுத்து ஆகியோர் பெங்களூருவுக்கு வந்துள்ளனர்.

இவர்களை கர்நாடக மாநில அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட தொகுதி, வட்ட பிரதிநிதிகள், முன்னாள் பிரதிநிதிகள், கட்சி செயல் வீரர்கள், மூத்த பிரமுகர்கள் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மொத்தம் உள்ள 33 பொதுக்குழு உறுப்பினர்களில் 27 பேர் ஆதரவு தெரிவித்தனர். சிவமொக்கா, தங்கவயல் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து அ.தி.மு.க. பெங்களூரு மாவட்ட முன்னாள் செயலாளர் எஸ்.டி.குமார் கூறுகையில், மேலும் பல அ.தி.மு.க. உறுப்பினர்களும் எங்களிடம் வர இருப்பதாக உறுதி அளித்துள்ளனர். புரட்சி தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க. என்ற இயக்கத்தை 3–வது பெரிய கட்சியாக ஜெயலலிதா உருவாக்கினார். இப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் உண்மையான அ.தி.மு.க. தலைவர்களின் எழுச்சியால் அ.தி.மு.க. ஒன்றுபட்டுள்ளது என்றார்.


Next Story