அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் போலீஸ் சோதனை சாவடி அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் போலீஸ் சோதனை சாவடி அருகே சப்–இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து லாரி உரிமையாளர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த ராபர்ட் கென்னடி (வயது 32), மற்றும் லாரி டிரைவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவா (24), தேவிபட்டினம் தீரைக்குடி ராஜேந்திரன்(40), கூரங்கோட்டை ராமன் மகன் முருகன்(42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக லாரி உரிமையாளர்கள் பத்திரன்வயல் கண்ணன், ராமநாதபுரம் புல்லங்குடி முருகேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story