நாகர்கோவிலில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்


நாகர்கோவிலில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2017 4:00 AM IST (Updated: 10 Sept 2017 11:54 PM IST)
t-max-icont-min-icon

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட அவைத்தலைவர் ஜோசப்ராஜ் தலைமைதாங்கினார். நகர செயலாளர் மகேஷ் முன்னிலைவகித்தார்.

நாகர்கோவில்.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட அவைத்தலைவர் ஜோசப்ராஜ் தலைமைதாங்கினார். நகர செயலாளர் மகேஷ் முன்னிலைவகித்தார். இதில், மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில், ஆஸ்டின் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், பொருளாளர் கேட்சன், துணை செயலாளர் முத்துசாமி உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ‘நீட்‘ தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவிப்பது, குளங்கள், சாலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நகராட்சியையும், பொதுபணித்துறையையும் கேட்டுக்கொள்வது, குண்டும், குழியுமான சாலைகளை உடனே சீரமைக்கக்கோருவது என்றும், சீரமைக்காத பட்சத்தில் போராட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story