சென்னை சென்டிரலில், குழந்தையுடன் சுற்றி திரிந்த பெண் மீட்பு கணவர் துன்புறுத்துவதாக கண்ணீர் விட்டு கதறல்


சென்னை சென்டிரலில், குழந்தையுடன் சுற்றி திரிந்த பெண் மீட்பு கணவர் துன்புறுத்துவதாக கண்ணீர் விட்டு கதறல்
x
தினத்தந்தி 11 Sept 2017 4:30 AM IST (Updated: 11 Sept 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையுடன் பெண் ஒருவர் சுற்றித்திரிவதை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் நோட்டமிட்டனர்.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக குழந்தையுடன் பெண் ஒருவர் சுற்றித்திரிவதை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் நோட்டமிட்டனர். இதையடுத்து அந்த பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்துவந்து அவரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த பெண் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுஜாதா என்பதும், கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்து தனது குழந்தையுடன் ரெயில் மூலம் சென்னைக்கு வந்ததும், இங்கு என்ன செய்வது? என்று தெரியாமல் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. தினமும் கணவர் குடித்துவிட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் சுஜாதா கண்ணீர் விட்டு அழுதார்.

இதையடுத்து சுஜாதாவின் கணவரை தொடர்புகொண்ட போலீசார், அவரை சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரித்தனர். பின்னர் உரிய அறிவுரைகள் வழங்கி, அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story