ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி: கணவன் – மனைவியை பிடிக்க போலீசார் தீவிரம்


ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி: கணவன் – மனைவியை பிடிக்க போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 11 Sept 2017 3:30 AM IST (Updated: 11 Sept 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகேயுள்ள விக்கிரமங்கலம் நரியம்பட்டியில் ஏலச்சீட்டு நடத்தி வந்த செல்வம்(வயது45) அவரது மனைவி மணி(35) ஆகியோர் திடீரென்று மாயமாகி விட்டனர். இவர்கள் இருவரும் சுற்றுப்பிற கிராமங்களில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்து விட்டதாக கூறப்பட்டது.

இதனைதொடர்ந்து அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஒன்று திரண்டு வந்து விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார்கள். இந்த தம்பதிகள் மீது புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளது. குற்றப்பிரிவு போலீசார் நரியம்பட்டிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோசடி செய்த தம்பதி மதுரையில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story