நீட் தேர்வை ரத்துக் செய்யக்கோரி காந்திய மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்துக் செய்யக்கோரி காந்திய மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2017 3:15 AM IST (Updated: 11 Sept 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, காந்திய மக்கள் இயக்கம் சார்பில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் மாநில மகளிர் அணி செயலாளர் உமாராணி, மாவட்ட பொருளாளர் சுப்பையா, ஆலோசனைக்குழு தலைவர் நாச்சியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 அப்போது அரியலூர் மாணவி அனிதா தற்கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கோ‌ஷமிட்டனர்.


Next Story