மண்வள அட்டையை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் கலெக்டர் தகவல்


மண்வள அட்டையை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Sept 2017 3:45 AM IST (Updated: 11 Sept 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

மண்வள அட்டையை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்,

விவசாயிகள் மண்பரி சோதனை செய்து மண் வளத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பயிருக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகள், நன்மை தரும் நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் இவற்றை கொண்டே மண் வளம் நிர்ணயிக்கப்படுகிறது. இத்தகைய மண்ணில் விளையும் பயிர்களின் உற்பத்தி திறன் அதிகரித்து, விவசாயிகள் நிலையான வருமானம் பெறலாம்.

மண் மாசுபடுதல், மாறி வரும் பருவ நிலைகளின் விளைவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் 1980-ம் ஆண்டில் 1.26 சதவீதமாக இருந்த மண்ணின் அங்ககச் சத்து தற்போது, குறைந்துள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிருக்கேற்ற சமச்சீர் உரங்களையும், அதிக அளவில் தழை மற்றும் தொழு உரங்களை உபயோகிப்பதால் மட்டுமே இழந்த மண் வளத்தை மீட்கவும், பாதுகாக்கவும் முடியும்.

தமிழகத்தில் “மண் வள அட்டை” வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக மண் வள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மண்வள அட்டையில் மண்ணிற்கு ஏற்ப பயிரை தேர்வு செய்தல், பயிருக்கு ஏற்ற பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட உரங்கள் இடுதல், ரசாயன உரஉபயோகத்தை குறைத்து அதிக அளவில் ஊட்டமேற்றிய தொழுஉரம், பசுந்தாள் உரம், நுண்ணுயிர் உரங்களை உபயோகிப்பதற்காக பரிந்துரை செய்யப்படுகிறது. எனவே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் மண் வள அட்டையினை வேளாண்துறை அலுவலகங்களில் பெற்று, அதனை உபயோகித்து, அதில் குறிப்பிட்டுள்ளவாறு உரங்களை பயன்படுத்தி, விவசாயம் செய்து, அதிக மகசூல் பெற்று, வேளாண்மையில் இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு வருமானத்தை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story