தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு மருத்துவமனையில் மகனுடன் விவசாயி உண்ணாவிரதம்
தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மகனுடன் விவசாயி உண்ணாவிரதம் இருந்தார்.
கும்பகோணம்,
கும்பகோணம் அருகே உள்ள சாத்தங்குடி வடக்குத்தெருவை சேர்ந்தவர் குருநாதன்(வயது65). இவருடைய மகன் கோபு(37). இவர்கள் சுமார் 30 ஆண்டுகளாக 17 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் சம்பா சாகுபடிக்காக எந்திரம் மூலம் நடவு செய்ய கடந்த 20 நாட்களுக்கு முன் நாற்று விட்டனர். நடவு பணிக்காக நேற்று முன் தினம் குருநாதனும், கோபுவும் வயலில் வரப்பை சீர் படுத்திக்கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அவர்களது உறவினர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து தந்தை- மகனிடம் இந்தநிலத்தில் நடவு மேற்கொள்ளக்கூடாது நாங்கள் குத்தகையை மாற்றி விட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து குருநாதனும் அவரது மகன் கோபுவும் கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை குருநாதனும் கோபுவும் வயலுக்கு சென்று அங்கிருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர்கள் சிவா, சக்திவேல், மதியழகன், சவுந்தரராஜன், கார்த்தி உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்டோர் இருவரையும் கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் குருநாதனும், கோபுவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story