தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய த.மா.கா. பாடுபடும் ஜி.கே.வாசன் பேட்டி


தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய த.மா.கா. பாடுபடும் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 11 Sept 2017 4:30 AM IST (Updated: 11 Sept 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான மக்களாட்சி அமைய த.மா.கா. பாடுபடும் என்று திருச் செங்கோட்டில் ஜி.கே.வாசன் கூறினார்.

திருச்செங்கோடு,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு விழாக்களில் கலந்துகொண்டார். இதை யொட்டி திருச்செங்கோடு வந்த அவர், கட்சி கொடியேற்று விழா, த.மா.கா. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உயர்கல்வி மாணவர்களின் வசதிக்காக போட்டித் தேர்வுக் கான நூல்களை கொண்ட நூலக திறப்பு விழா ஆகிய வற்றில் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர் களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- தமிழ்நாட்டில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற் கான சுகாதார பணிகளை மாநில அரசு துரிதப்படுத்த வேண்டும். இதற்கு தனியாக ஒரு நடமாடும் சிகிச்சை வாகனத்தை செயல்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி.யின் மூலம் விவசாயத்தின் நண்ப னாக உள்ள ரிக் வண்டி தொழில் பாதித்துள்ளது. ரிக் தொழிலுக்கு 28 சதவீதத்தில் உள்ள வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

‘நீட்‘ தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் மத்திய அரசு செயல்பட கோரி வருகிறோம். மராட்டியத்திலும், தமிழகத்திலும் ஒரே கவர்னர் செயல்பட்டு வருகிறார். தமிழகத்துக்கு என்று தனியாக ஒரு கவர்னரை நியமிக்காமல் மத்திய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. தமிழக ஆளும் கட்சியின் பிரச்சினையால் மாநில மக்கள் பிரச்சினையை அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. கவர்னர் நடுநிலையோடு செயல்பட்டு நல்ல தீர்வு காணவேண்டும். தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான மக்களாட்சி அமைய வேண்டும். அதற்காக த.மா.கா. பாடுபடும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

பேட்டியின்போது த.மா.கா. மாநில துணைத் தலைவர் கந்தசாமி, பொதுச் செயலாளர் விடியல் சேகர், நாமக்கல் மேற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Next Story