கிருஷ்ணகிரியில் மக்கள் நீதிமன்றம்: 1,148 வழக்குகளுக்கு தீர்வு
கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,148 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கினார். மக்கள் நீதிமன்ற தலைவர் அறிவொளி வரவேற்று பேசினார்.
இந்த முகாமில் காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிறு வழக்குகள், குடும்ப பிரச்சினைகள், இழப்பீடு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
1,148 வழக்குகளுக்கு தீர்வு
அதில், வங்கி தொடர்பாக 1,250 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு 103 வழக்குகளுக்கு ரூ. 1 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 315 மதிப்பிலும், சிறு குற்றங்கள் தொடர்பாக 1,024 வழக்குகளில் 983 வழக்குகளுக்கு ரூ. 4 லட்சத்து 9 ஆயிரத்து 775 மதிப்பிலும், காசோலை மோசடி தொடர்பாக 47 வழக்குகளில் 15 வழக்குகளுக்கு ரூ. 50 லட்சத்து 65 ஆயிரம், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தொடர்பாக 461 வழக்குகளில் 19 வழக்குகளுக்கு ரூ.62 லட்சத்து 88 ஆயிரம், சிவில் உள்ளிட்ட இதர 465 வழக்குகளில் 28 வழக்குகளுக்கு ரூ.91 லட்சத்து 61 ஆயிரத்து 100 மதிப்பீல் தீர்வு காணப்பட்டது.
ஒரே நாளில் ஆயிரத்து 148 வழக்குகளில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரத்து 190 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. இந்த முகாமின் நிறைவில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகள் குழு செயலாளரும், சிறப்பு நீதிபதியுமான தஸ்னீம்பானு நன்றி கூறினார். இதில், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story