ஜனதாதளம்(எஸ்) நிர்வாகிகளுடன் குமாரசாமி ஆலோசனை
பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தல் குறித்து ஜனதா தளம்(எஸ்) கட்சி நிர்வாகிகளுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
இந்த காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரசுடன் கூட்டணியை தொடருவது குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களுடன் குமாரசாமி பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணியை தொடருவது குறித்து எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினேன். இந்த ஆண்டு மேயர் பதவியை நமது கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினர். மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக காங்கிரஸ் நடந்து கொள்ளும் விதம் சரியல்ல.தேர்தல் நெருங்கும்போது தான் அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் வருகிறது. வார்டுகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. மேயர் தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை என்னையோ அல்லது கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவையோ சந்தித்து பேசவில்லை.
எங்கள் கட்சிக்கு காங்கிரஸ் அவசியம் என்று அவர்கள் கருதினால் அது தவறாகிவிடும். அத்தகைய அவசியம் எங்களுக்கு இல்லை. தேவேகவுடாவுடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு உரிய முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story