மத்திய அரசு துறைகளில் 577 பணிகள்


மத்திய அரசு துறைகளில் 577 பணிகள்
x
தினத்தந்தி 11 Sept 2017 2:30 PM IST (Updated: 11 Sept 2017 1:47 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் ஒன்று எஸ்.எஸ்.சி. தற்போது இந்த அமைப்பு, மத்திய அரசின் பொது குறைகள் மற்றும் பென்சன் துறையில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

 தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 66 பணியிடங்கள் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மண்டலங்களில் மொத்தம் 577 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் அதிகபட்சமாக மத்திய வடக்கு மண்டலத்தில் 244 பணியிடங்கள் உள்ளன.

டெக்னிக்கல் சூப்பிரன்டெனட், ஒர்க்‌ஷாப் சூப்பிரண்டென்ட், சீனியர் இன்ஸ்ட்ரக்டர், மெடிக்கல் அட்டென்ட், லேடி மெடிக்கல் அட்டென்ட், கன்சர்வேசன் அசிஸ்டன்ட், ஜூனியர் கன்சர்வேசன் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது.

27 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கைத்தறி தொழில்நுட்பம், டெக்ஸ்டைல் டெக்னாலஜி போன்ற டிப்ளமோ படிப்புகள், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல், சிவில் போன்ற 3 ஆண்டு என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்புகள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள், புள்ளியில், கணிதவியல், பொருளாதாரம், சோசியாலஜி, சோசியல் ஒர்க் போன்ற துறையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணைய தள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவும், நகல் சென்றடையவும் கடைசி நாள் 24-9-2017-ந் தேதியாகும். தமிழக விண்ணப்பதாரர்கள் www.sscsr.gov.in என்ற இணையதளம் வழியாகவும், மற்றவர்கள் அந்தந்த மண்டல எஸ்.எஸ்.சி. இணையதள பக்கங்கள் வழியாகவும் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களையும் அதில் காணலாம்.

Next Story