பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம்: அரசியல் கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பரமக்குடி,
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 60–வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவர் பிறந்த ஊரான செல்லூர் கிராமத்தில் இருந்து கிராம தலைவர் சேது தலைமையில் முன்னாள் ஊராட்சி தலைவர் மகேசுவரி ஜீவன் மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜன், பண்பாட்டு கழக தலைவர் சண்முகம், செயலாளர் கார்மேகம், பொருளாளர் சங்கரலிங்கம், துணை தலைவர் முருகேசன், துணை செயலாளர் தேவேந்திரர், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் சார்பில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி தலைமையில் பேரன்கள் ரமேஷ்குமார், கோமலன், சக்கரவர்த்தி, பேத்தி செல்சியா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலித்தினர்.
அதனை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் அன்வர்ராஜா எம்.பி., மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, ஜே.எஸ்.கே.ரஜினிகாந்த், ஒன்றிய செயலாளர்கள் நவநாதன், குப்புச்சாமி, முத்தையா, தலைமை கழக பேச்சாளர் ஜமால் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழர் மாமன்றம் சார்பில் முன்னாள் நகரசபை கவுன்சிலர் மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் காளிதாஸ் பாண்டியன், முருகேசன், முருகன், ஜம்பு, கமிஷன் கடை தங்கவேலு, மாரிமுத்து, உதயக்குமார், அசாருதீன், அழகிரி, பாலசுப்பிரமணியன், கபார்கான், சேகர், லட்சுமணன், கஜேந்திரன், முனியசாமி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் திவாகரன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தமிழரசி, சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திசைவீரன், முருகவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைச்சாமி, நகர் செயலாளர் சேது கருணாநிதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, பரமக்குடி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, பரமக்குடி இளைஞரணி நகர் அமைப்பாளர் சம்பத்குமார், மாவட்ட துணை அமைப்பாளர் குமரகுரு உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. சார்பில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சதன் திருமலைக்குமார், பூமிநாதன் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் குணா, மார்நாகு, பரமக்குடி நகர் செயலாளர் பழ.சரவணன், பொதுக்குழு உறுப்பினர் பிச்சைமணி, மாவட்ட துணை செயலாளர் பசீர் அகமது உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் ராம்பிரபு தலைமையில் மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திர ராமவன்னி, ரெங்கநாதன், நகர் தலைவர் கோதண்டராமன், பொதுக்குழு உறுப்பினர் ரபீக் அகமது உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் விக்னேசுவரன், பரமக்குடி ராம்பகவத் சிங் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், அமைப்பு செயலாளர்கள் வ.து.நடராஜன், ஜி.முனியசாமி, சோமாத்தூர் சுப்பிரமணியன், கவிதா சசிக்குமார், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், டி.டி.வி. தினகரன் பேரவை மாநில இளைஞரணி துணை செயலாளர் மணல் சந்திரசேகர், ஆவின் துணை தலைவர் அபிராமம் நாகராஜன், மாணவரணி துணை தலைவர் அம்மா சரவணன், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் இலக்குவன், எம்.ஜி.ஆர். இளைஞரணி ஒன்றிய செயலாளர் சாகுல்ஹமீது, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜபாண்டி, அரிகிருஷ்ணன், பாண்டி, சாத்தனூர் ஊராட்சி கழக செயலாளர் ராமநாதன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பிரபு, மாவட்ட பிரதிநிதி முகுந்தன், உப்பூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், உப்பூர் அம்பலம் குமரையா, விசுநாதன், முருகானந்தம், சோமசுந்தரம்,முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜசெல்வி குருந்தையா,எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ.க. சார்பில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாநில செயலாளர்கள் சீனிவாசன், பொன்.பாலகணபதி, மாநில துணை தலைவர்கள் குப்புராமு, நாகராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் சண்முகராஜ், அமைப்பு செயலாளர் குமார் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பத்மநாதன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் செல்லத்துரை காமராஜ், நகர் செயலாளர் கார்த்திகன் உள்பட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் சரவணகாந்தி, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் ஆகியோர் தலைமையில் முன்னாள் எம்.பி. விசுநாதன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை, மாநில மகளிரணி தலைவி ஜான்சிராணி, மாவட்ட பொது செயலாளர் கோட்டைமுத்து, நகர் தலைவர் அப்துல் அஜீஸ், நகர் பொருளாளர் கோபால், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தகுமார், ஓவியர் பிரிவு மாநில தலைவர் ஆர்ட் கணேசன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
முதுகுளத்தூர், கமுதி, கடலாடி வட்டார ஒருங்கிணைப்பு தேவேந்திர குல சங்கம் சார்பில் அதன் தலைவர் வேலுச்சாமி தலைமையில் செயலாளர் ஜேம்ஸ், பொருளாளர் இளமாறன், துணை தலைவர் பாரதி, துணை செயலாளர் ஆபிரகாம் உள்பட கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநில பொது செயலாளர் சாமுவேல் ராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் வான்தமிழன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் மாவட்ட துணை செயலாளர் கதிர்வேலன், நகர் செயலாளர் அன்பு தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் சந்திரபிரகாஷ், அசோக், மாணிக்கவேலு, மகளிரணி தலைவி நாகவள்ளி மற்றும் நிர்வாகிகள் பால்குடம் எடுத்து வந்து அஞ்சலி செலுத்தினர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் துணை பொது செயலாளர் வடிவேல் ராவணன் தலைமையில் மாநில துணை செயலாளர் தளபதி ராஜ்குமார், மாநில துணை தலைவர் அறிவழகன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:– சாதி ஒழிப்பு களத்தில் உயிர் நீத்தவர் இமானுவேல் சேகரன். அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்த வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் சாதியின் பெயரால் வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. ஆணவக்கொலைகள் அதிகரித்து வருகிறது. குடிசைகள் கொளுத்தப்படுகின்றன. 2015ல் வன்கொடுமை தடுப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதை முதன் முதலாக தமிழகத்தில் பயன்படுத்த வேண்டும். இதற்கு தனிச்சட்டம் தேவை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய–மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகமாடி போலியான நம்பிக்கையை வளர்த்துள்ளன. இதற்கு அனிதா என்ற மாணவி மட்டும் பாதிக்கப்படவில்லை. அனைவருக்கும் இது பாதிப்பு தான். கல்வியிலும் காவியை புகுத்தி மதத்தை திணிக்கப்பார்க்கின்றனர். 21–ந்தேதி மாநில சுயாட்சிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பிற மாநில முதல்–அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தியாகி இமானுவேல் பேரவையின் சார்பில் அதன் நிறுவன தலைவர் சந்திரபோஸ் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். கருத்தனேந்தல் ஊராட்சி சார்பில் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜசெல்வி குருந்தையா தலைமையில் கிராம மக்களும், மகளிர் மன்றத்தினரும் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு தேவேந்திர பேரவையின் சார்பில் நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாநில பொருளாளர் ஸ்டாலின் பிரபு, மாநில இளைஞரணி செயலாளர் மயில்சாமி, வக்கீல் அணி செயலாளர் வாசுதேவன் உள்பட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தேவேந்திரர் பணியாளர் நலச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய–மாநில எஸ்.எசி., எஸ்.டி.பிரிவு தலைவர் கருப்பையா தலைமையில் மாவட்ட செயலாளர் சேக்கிழார் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கடலாடி தாலுகா தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் கவுரவ தலைவர் நீலமேகம், செயலாளர் திரவியபாண்டியன், தலைவர் ஆர்தர், நிர்வாக பொறுப்பாளர் ஆறுமுகம், துணை தலைவர் பாக்கியநாதன், நிர்வாக குழு இளவரச பாண்டியன், எழுத்தாளர் சத்தியகீர்த்தி, நிர்வாக குழு குமார் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். எஸ்.இலந்தைகுளம் தேவேந்திர குல வேளாளர் இளம் கல்வியாளர்கள் பேரவை சார்பில் வக்கீல்கள் ஜெயபால், பாண்டியன் தலைமையில் செல்வம், திலீபன் மற்றும் நிர்வாகிகள் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் இருந்து இளைஞர்கள் தொடர் ஜோதி ஓட்டம் எடுத்து வந்தும், பெண்கள் பால்குடம் எடுத்து வந்தும் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஏராளமானோர் முடிக்காணிக்கை செலுத்தினர். பொன்னையாபுரம், காந்திநகர், சரசுவதி நகர், பாலன்நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு மாவட்ட எல்லையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பொருளாளர் செய்யது இபுராகீம்ஷா, முன்னாள் ஊராட்சி தலைவர் வாசுதேவன், ஊராட்சி கழக செயலாளர்கள் அண்ணாதுரை, ரெத்தினமூர்த்தி, ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கண்ணன், பழனிவேல், முரளி, கிளை செயலாளர் அழகு சரவணன், துரைபாலன், ஆர்.எஸ்.மங்கலம் நகர் செயலாளர் குட்லக் ரகுமத்துல்லா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நதியா முருகபூபதி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் அஜய்நாத், உப்பூர் முத்துமாரி, நாகநாதன், கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, கமுதி நகர் செயலாளர் முத்துராமலிங்கம், காட்டுராஜா, மோகன், அபிராமம் பேரூராட்சி முன்னாள் தலைவர் குமணன், டாக்டர் கபிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.