டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு; பெண்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்
குருந்தன்கோட்டில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கடையை திறக்க கோரி மதுபிரியர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
திங்கள்சந்தை,
இரணியல் அருகே குருந்தன்கோட்டில் சரல் செல்லும் சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த கடைகளால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதால் அவற்றை மூட வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல கட்டங்களாக போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் முதல் அந்த கடைகள் மூடப்பட்டன. ஆனால், அவற்றில் இருந்த மது பாட்டில்கள் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே இருந்தன.
இந்தநிலையில், நேற்று மதியம் ஒரு கடையில் இருந்த மது பாட்டில்களை எடுப்பதற்காக டாஸ்மாக் ஊழியர்கள் வந்தனர். அவர்கள் கடையை திறந்து பொருட்களை எடுத்து கொண்டிருந்த போது அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மது பிரியர்கள் அங்கு கூடினர். அவர்கள் கடையில் இருக்கும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது எனவும், கடையை மீண்டும் திறக்க வலியுறுத்தியும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மது பிரியர்களின் செயலை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் அங்கு கூடினர். அவர்கள் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க கூடாது எனவும், மது பிரியர்களின் நடவடிக்கையை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரின் போராட்டத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளிச்சந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த கடை தொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களின் ஆலோசனைபடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். மேலும், மறு உத்தரவு வரும்வரை கடையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டாம் என ஊழியர்களிடம் கூறினர். இதனால், பொருட்களை எடுக்க வந்த ஊழியர்கள் கடையை மூடிவிட்டு திரும்ப சென்றனர். அத்துடன் மது பிரியர்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
ஆனால், அங்கு கூடியிருந்த பெண்கள் கலைந்து போக மறுத்தனர். அவர்கள் டாஸ்மாக் கடையை இந்த பகுதியில் இருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அங்கேயே அமர்ந்து கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் கலைந்து போகாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story