மதுக்கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு கிருஷ்ணகிரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
மதுக்கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள லைன்கொல்லை கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் கதிரவனிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் 1,500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் மதுக்கடை கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். அவ்வாறு மதுக்கடை திறக்க உள்ள இடத்திற்கு அருகில் 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருவிழா நடத்தும் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.
திறக்க வேண்டாம்
இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பெண்களும், ஆண்களும் வந்து செல்கின்றனர். அத்துடன் எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் அந்த வழியாக தான் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு மதுக்கடையை திறந்தால் கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருக்கும். அத்துடன் அதே பகுதியில் தர்கா ஒன்றும் உள்ளது.
எனவே, பொதுமக்கள் விரும்பாதபட்சத்தில் இந்த பகுதியில் மதுக்கடையை திறக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை தாலுகா
ஊத்தங்கரை தாலுகா கே.எட்டிப்பட்டி குமாரம்பட்டி கிராம மக்கள் ஊர்கவுண்டர் ராமசாமி தலைமையில் கலெக்டர் கதிரவனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் ஏற்கனவே ஒரு மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் குமாரம்பட்டியில் மேலும் ஒரு மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்தனர்.
அப்போது தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மதுக்கடையை திறக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய மதுக்கடையை திறக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த பகுதியில் மேல்நிலை, நடுநிலைப்பள்ளிகள், கோவில்கள் உள்ளன. இங்கு மேலும் ஒரு மதுக்கடை திறந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே மதுக்கடையை திறக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story