கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன் பா.ம.க. ஆர்ப்பாட்டம்


கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன் பா.ம.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி,

விவசாய வேளாண் பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசை கண்டித்து, கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் துரை.ஜெயவேலு, மாவட்ட செயலாளர் குபேந்திரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் பணியில் இருந்த வட்ட நில அளவை சார் ஆய்வாளர் சூரியநாராயணனிடம் தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை பா.ம.க. நிர்வாகிகள் அளித்தனர்.


Next Story