நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2017 5:45 AM IST (Updated: 12 Sept 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் நேற்று வாயில் கருப்புத் துணி கட்டி மவுனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

மாணவி அனிதாவின் மரணத்துக்கு பின் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் நேற்று 3–வது நாள் போராட்டமாக வாயில் கருப்புத் துணி கட்டி மவுனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை புதுக்கல்லூரி மாணவர் தலைவர் மசூத் அகமது மற்றும் மாலை நேர கல்லூரி மாணவர் தலைவர் இனாமுல் ஆகியோர் முன்னின்று நடத்தினர். மவுனப்போராட்டம் என்பதால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க மறுத்துவிட்டனர்.

கல்லூரி முதல்வர் ஜாகீத் உசைன் கூறும்போது, ‘‘கல்லூரியில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 200 ஆகும். இதில் சுமார் 100 மாணவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுவும், கல்லூரி வளாகத்துக்குள்ளேயே அமைதியான முறையில் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.


Next Story