கோவையில் வலுவிழந்த நிலையில் அரசு கட்டிடங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை
கோவை மாவட்டம் முழுவதும் வலுவிழந்த நிலையில் அரசு கட்டிடங்கள், பஸ் நிலைய கட்டிடங்கள் உள்ளன.
கோவை,
இந்த கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுநல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கோவை அருகே உள்ள சோமனூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து கல்லூரி மாணவி உள்பட 5 பேர் உடல் நசுங்கி இறந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ் நிலைய கட்டிடத்தில் மழைநீர் தேங்கி, ஈரப்பதம் அதிகரித்து இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
சோமனூர் பஸ் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்ததை போல் மீண்டும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
மாவட்டம் முழுவதிலும் சில பஸ் நிலைய கட்டிடங்கள் வலுவிழந்த நிலையில் உள்ளன. இதேபோல் குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான சில குடியிருப்பு கட்டிடங்களும் பல இடங்களில் வலுவிழந்த நிலையில் உள்ளன.
கோவை காந்திபுரம் டவுன் பஸ்நிலைய வளாகத்தில் பயணிகள் காத்து நிற்கும் நடைமேடை பகுதியில் மேற்கூரை சிதிலமடைந்து சிறிது சிறிதாக உடைந்து விழுந்தபடி இருக்கிறது. . இதனால் அந்த பகுதியில் பயணிகள் எப்போதும் பயத்துடனேயே பஸ்சுக்கு காத்து நிற்கிறார்கள். இது குறித்து பஸ்நிலையத்தில் இருந்த பயணிகள் கூறிய தாவது:-
கோவையில் பஸ்நிலைய கட்டிடங்கள்,சில அரசு அலுவலககட்டிடங்கள், நிழற்குடைகள்,பள்ளி கட்டிடங்கள்,சத்துணவு கூடங்கள், சுற்று சுவர்கள், வீட்டுவசதிவாரிய கட்டிடங்கள், குடியிருப்புகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.சில கட்டிடங்கள் எப்போது விழுவோம் என்று காத்து இருக்கின்றன. இந்த கட்டிடங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வதுடன் கட்டிடங்கள் சேதம் அடைந்து இருந்தால் மராமத்து செய்து பராமரிக்க வேண்டும்.
ஆயுள் முடிந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும்.மோசமான பள்ளிக்கட்டிடங்களை தனியார் சேவை மையத்தினர்,சமூக சேவை அமைப்பினர் இடித்து அகற்றி புதிய கட்டிடங்கள் கட்ட உதவலாம். சோமனூரில் நடைபெற்ற உயிர்பலி சம்பவம் போல் மீண்டும் எங்கும் நடைபெற்றுவிடக்கூடாது. பயணிகளின் பாதுகாப்பில் மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ள இதர கட்டிடங்களையும் ஆய்வு செய்து பாதுகாப்பு குறித்து உறுதி செய்ய வேண்டும் என்று பொது நல அமைப்புகளும் மாவட்ட கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
கோவை நகரில் உள்ள பஸ் நிலைய கட்டிடங்களின் தரம் குறித்து மாநகராட்சி தலைமை என்ஜினீயர் கூறும்போது, ‘நகரில் உள்ள அனைத்து பஸ்நிலைய கட்டிடங்களும் தரமாக உள்ளன. எனவே பயணிகள் அச்சப்பட தேவையில்லை. லேசாக சேதம் அடைந்துள்ள பஸ்நிலைய மேற்கூரைகளும் விரைவில் சரி செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் கூறும்போது, ‘பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டு பராமரிக்கப்படும் அனைத்து கட்டிடங்களின் தரம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் ஆய்வு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

Related Tags :
Next Story