செயற்கை சுவாச கருவி பொருத்தியபோது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீக்கிரையான 108 ஆம்புலன்ஸ்
செயற்கை சுவாச கருவி பொருத்தியபோது, சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் எரிந்து தீக்கிரையானது. நோயாளி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). இவருக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக எரியோடு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக 108 ஆம்புலன்சுக்கு, ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வடமதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் வேன் புறப்பட்டது. ஆம்புலன்சை, சுரேஷ் என்பவர் ஓட்டினார். அவருடன் மருத்துவ உதவியாளர் பன்னீர்செல்வம் வந்தார். எரியோடு வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து சீனிவாசனை தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றினர். அவருடைய மூக்கில் செயற்கை சுவாச கருவி பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சிலிண்டரில் இருந்து ஆக்சிஜனை திறந்து விட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு ஆக்சிஜன் வெளியேறியது.
இதனை கண்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சீனிவாசனை வாகனத்தில் இருந்து உடனே கீழே இறக்கினர். சிறிதுநேரத்தில் ஆம்புலன்சில் இருந்த சிலிண்டர் கசிவு காரணமாக தீப்பிடித்தது. மள, மளவென பரவி ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பற்றி கொண்டது. இந்த காட்சியை கண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற நோயாளிகள், ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திரிக் குள் தீ பரவாமல் தடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்து தீக்கிரையாகி எலும்புக்கூடானது. இந்த தீ விபத்தில் டிரைவர் சுரேசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து, சீனிவாசனை உடனடியாக இறக்கியதால் அவர் உயிர் தப்பினார். இதற்கிடையே மற்றொரு 108 ஆம்புலன்ஸ் மூலம், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மருத்துவ உதவியாளர் பன்னீர்செல்வம் அதிர்ஷ்டவசமாக தப்பினார். நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் தீப்பிடித்த சம்பவம் எரியோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story