மாவடி பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் பால்குட ஊர்வலம்
மாவடி பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் நேற்று காலையில் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்திருப்பேரை,
மாவடி பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் நேற்று காலையில் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முத்தாரம்மன் கோவில்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மாவடி பண்ணை முத்தாரம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கொடை விழா கடந்த 5–ந் தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து வில்லிசை, மாக்காப்பு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கொடை விழா நேற்று நடந்தது. முன்னதாக காலையில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம் எடுத்து வந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அம்மன் வீதிஉலாபின்னர் இரவில் கரகாட்டம், வாணவேடிக்கையை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. இன்று (புதன்கிழமை) காலையில் கோவிலின் முன்பு பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். இரவில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.