திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து ஆபாச வீடியோவை வலைத்தளத்தில் பதிவேற்றினார்


திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து ஆபாச வீடியோவை வலைத்தளத்தில் பதிவேற்றினார்
x
தினத்தந்தி 13 Sept 2017 2:15 AM IST (Updated: 13 Sept 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து ஆபாச வீடியோவை வலைத்தளத்தில் பதிவேற்றிய கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

காதலித்து திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து ஆபாச வீடியோவை வலைத்தளத்தில் பதிவேற்றிய கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

திருமணம் செய்து கொள்வதாக...

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் அரிந்தம் நாத்(வயது 28). இவர் பெங்களூரு விவேக்நகர் அருகே உள்ள ஈஜிபுராவில் வசித்து கொண்டு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் சக ஊழியரான ஒடிசாவை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அரிந்தம் நாத், இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி ஈஜிபுராவில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து அடிக்கடி பேசியுள்ளார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறிய அரிந்தம் நாத், இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் அதை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்து கொண்டதாக தெரிகிறது.

மிரட்டி கற்பழிப்பு

பின்னர், அந்த வீடியோவை இளம்பெண்ணிடம் காட்டிய அரிந்தம் நாத், ‘நான் விரும்பும் போதெல்லாம் என் வீட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், வீட்டுக்கு வர மறுத்தால் ஆபாச வீடியோவை வலைத்தளத்தில் பதிவிடுவேன்‘ என்றும் அவர் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த இளம்பெண் சம்பவம் குறித்து யாரிடமும் கூறவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அரிந்தம் நாத், மேலும் சிலமுறை இளம்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி மிரட்டி கற்பழித்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அந்த வீடியோவை காட்டி அவர், இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

வீடியோ பதிவேற்றம்

இதனால், ஆத்திரம் அடைந்த அரிந்தம் நாத் அந்த ஆபாச வீடியோவை ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்து மனம் உடைந்த இளம்பெண் தான் தங்கியிருக்கும் அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அவருடைய தோழிகள் உடனடியாக அவரை மீட்டனர். இதனால், அவருடைய தற்கொலை முயற்சி தோல்வி அடைந்தது.

பின்னர், அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தோழிகளிடம் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யும்படி அறிவுரை வழங்கினர்.

கைது

அதன்படி, பாதிக்கப்பட்ட இளம்பெண் அரிந்தம் நாத் மீது விவேக் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிந்தம் நாத்தை கைது செய்தனர். அத்துடன், ஆபாச வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட ஆபாச வீடியோவும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் வலைத்தளத்தில் இருந்து அழிக்கப்பட்டது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story