கருமந்துறை கல்வராயன் மலையில் சோழர்கால பன்றிகுத்திபட்டான் சதிகல் கண்டுபிடிப்பு
கருமந்துறை பகுதியில் உள்ள கல்வராயன் மலையில் சோழர்கால காட்டுப்பன்றிகுத்திபட்டான் சதிகல், புதிய கற்கால கருவிகள், கற்திட்டைகள், குத்துகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தலைவாசல்,
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆறகழூர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர்கள் பெருமாள், கலைச்செல்வன், சீனிவாசன், டாக்டர்கள் அருண்குமார் பங்கஜ், பொன்னம்பலம் ஆகியோர் கல்வராயன் மலைப்பகுதியில் அருணா கிராமம், அத்திரிப்பட்டி ஆகிய ஊர்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அருணா கிராமத்தில், சோழர்கால காட்டுப்பன்றிகுத்திபட்டான் சதிகல் ஒன்று கண்டறியப்பட்டது. கணவர் இறந்து விட்டால் மனைவி உடன்கட்டை ஏறும் பழக்கம் பண்டைய காலத்தில் இருந்தது. வேளாண்மை சமூகத்தில் வாழ்ந்து வந்த மக்கள் விவசாய பயிர்களை காப்பாற்ற பல வழிகளிலும் முயற்சித்துள்ளனர்.
விளைந்த பயிர்களை நாசம் செய்து வந்த காட்டுப்பன்றிகள் கூட்டத்தை ஒரு வீரர் வேட்டையாடும் போது அந்த காட்டுப்பன்றிகளை கொன்று தானும் இறந்துள்ளார். அவர் மனைவியும், அவருடன் உடன் கட்டை ஏறி இறந்துள்ளார். அவர்களுக்காக வைக்கப்பட்ட சதிகல் இதுவாகும்.
சோழர்கால நடுகல்
இது சோழர் காலத்தை சேர்ந்த நடுகல்லாகும். வீரர் நீண்ட வில்லுடன் காட்டுப்பன்றியின் மீது அம்பை விடும் நிலையில் காட்டப்பட்டு உள்ளார். வீரரின் தலையில் வலது பக்கம் குவித்த கொண்டையில் இறகு அலங்காரமும், காதணி அற்ற நீண்ட காதும், கழுத்தை ஒட்டி மணியால் ஆன ஆபரணமும் காட்டப்பட்டுள்ளது. குறுவாளுடன் கூடிய அரைக்கச்சை ஆடையும், கையில் வளையமும், கீழ் நோக்கி பாயும் நிலையில் அம்பும் உள்ளது.
ஆணுக்கு காட்டப்பட்ட அதே தலை அலங்காரத்துடன் காதணி அணிந்த பெண் மேலாடையின்றி இடையில் அரையாடையுடன் ஆணை விட உயரம் குறைந்த நிலையில் பெண் காட்டப்பட்டுள்ளார். ஒரு கை மடக்கிய நிலையிலும், ஒரு கை தொங்க விடப்பட்ட நிலையிலும், காலில் தண்டையும், கையில் வளையமும் உள்ளது. இவர்கள் அருகே காட்டுப்பன்றி ஒன்று முதுகில் அம்பு பாய்ந்த நிலையில் வீரனை தாக்க முயல்வது போல் உள்ளது. 3 பன்றிகள் இறந்த நிலையில் உள்ளன.
கூட்டமாக வந்த காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய வீரன் அவற்றை கொன்று தானும் இறந்துள்ளான். இந்த கருமந்துறையில் தான் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏறு தழுவுதல் நடுகல் ஒன்று தொல்லியல் துறையால் கண்டறியப்பட்டு தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
புதிய கற்கால கருவிகள்
கருமந்துறை அருகே அத்திரிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 70-க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் கண்டறியப்பட்டன. இவை பல்வேறு வடிவங்களில் உள்ளது. வேட்டையாடவும், வேட்டையாடிய விலங்குகளை துண்டாக்கவும், கொட்டைகளை உடைக்கவும் இக்கருவிகள் பயன்பட்டன. இதன்மூலம் இப்பகுதியில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்து வந்திருப்பதை அறிய முடிகிறது.
இந்த ஊருக்கு அருகே உள்ள நாட்டம்பாறை என்ற இடத்தில் 5 கற்திட்டைகள் உள்ளன. 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் தன் குழுவில் இறந்த முக்கியமான தலைவர்களுக்கு இதுபோன்று கல்திட்டைகள் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர். இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story