நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2017 4:30 AM IST (Updated: 14 Sept 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

மத்திய– மாநில அரசுகளை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை,

நீட் தேர்வை கொண்டு வந்துள்ள மத்திய– மாநில அரசுகளை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி மதுரை புறநகர் மாவட்டத்தின் சார்பில் ஊமச்சிகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கோ‌ஷம் எழுப்பினர்.

இதுபோல், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, வேலுச்சாமி தலைமையில் மதுரை அண்ணாநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முன்னாள் மேயர் குழந்தைவேலு, காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் விஜயராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story