நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2017 5:00 AM IST (Updated: 14 Sept 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே நேற்று திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாணவி அனிதா சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், ராசகுமார், மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் அருகே தி.மு.க. சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

காஞ்சீபுரம் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி, காஞ்சீபுரம் நகர செயலாளர் சன்பிராண்டு கே.ஆறுமுகம், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜீ.வி.மதியழகன், தி.மு.க. நிர்வாகிகள் சி.வி.எம்.அ.சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன், தி.அன்பழகன், முஸ்லிம்லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story