ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டம் 400 பேர் கைது
வேலூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டம் 400 பேர் கைது
வேலூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் (ஜாக்டோ-ஜியோ) தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஐகோர்ட்டு மதுரை கிளை தடைவிதித்தபிறகும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். கோரிக்கைகள் குறித்து நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்தனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சுமார் 2-30 மணியளவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ, ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும்பாலான பெண்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதைத்தொடர்ந்து 400 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story