திருவள்ளூர் கோ–ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை
திருவள்ளூர் காந்தி சாலையில் உள்ள கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் காந்தி சாலையில் உள்ள கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடந்தது. இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
திருவள்ளூர் கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு மட்டும் இந்த ஆண்டு விற்பனை இலக்காக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலையத்தில் சென்ற ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.76 லட்சத்து 88 ஆயிரம் ஆகும். தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்பு தள்ளுபடி இந்த ஆண்டும் அனைத்து கைத்தறி ரகங்களுக்கும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கோ–ஆப்டெக்சின் சென்னை மண்டல மேலாளர் சங்கர், திருவள்ளூர் விற்பனை நிலைய மேலாளர்கள் ராமநாதன், ரோஸ்மேரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story