மதுரவாயலில் 230 பேருக்கு தாலிக்கு தங்கம்
மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், மாதவரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 230 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மதுரவாயல் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடந்தது.
பூந்தமல்லி,
தமிழக அரசின் சார்பில் 10 மற்றும் 12–ம் வகுப்பு படித்து முடித்த பெண்களுக்கு திருமணத்தின் போது 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரமும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ரூ.50ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர், மாதவரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 230 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மதுரவாயல் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடந்தது.
விழாவுக்கு தாசில்தார் குமார் தலைமை தாங்கினார். இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு 230 பெண்களுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் பணத்தை வழங்கினார்கள்.
மேலும் கண் பார்வையற்றவர்களுக்கு ‘பிரையல் கடிகாரம்’, மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு 3 சக்கர சைக்கிள், தையல் எந்திரங்கள் ஆகியவற்றை வழங்கினர். இதில் அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story