உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரியில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி மனித சங்கிலி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.
மதுரை,
தமிழகம் முழுவதும் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ஊர்வலம், மனித சங்கிலி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி நேற்று காலை மனித சங்கிலி நடைபெற்றது.
ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியன் (பொறுப்பு) தொடங்கி வைத்தார். இதில் டாக்டர்கள், நர்சுகள், நர்சிங் கல்லூரி மாணவிகள், மருத்துவ பணியாளர்கள், தனியார் பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி மருத்துவக்கல்லூரியில் தொடங்கி அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் வரை நடைபெற்றது.
ஊர்வலம்
அதைத்தொடர்ந்து உடல் தானத்தை வலியுறுத்தி மருத்துவ கல்லூரியில் இருந்து அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி ஆடிட்டோரியம் வரை டாக்டர்கள், மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து வந்தனர். இதில் டாக்டர்கள் அருண் பாலகோபால், ரத்தினவேல், மயக்கவியல் துறை டாக்டர் ஈவ்ளின் ஆசீர்வாதம், உடல் உறுப்பு தான பிரிவு டாக்டர் கல்யாண சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story