சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரதம்


சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 15 Sept 2017 4:15 AM IST (Updated: 15 Sept 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் உண்ணாவிரதம்

மதுரை,

மதுரை ரெயில் நிலையத்தில் துப்புரவு பணிகளை செய்து வரும் ஊழியர்கள் கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நேற்று காலை முதல் திடீரென்று மதுரை ரெயில் நிலையத்திற்குள்ளேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த போராட்டத்துக்கு ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் நவுசாத் அலி, செயலாளர் கணபதியம்மாள் ஆகியோர் தலைமை தாங்கினர். டி.ஆர்.இ.யூ. கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.

நேற்று மாலை மதுரை கோட்ட கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.பாஸ்கர், முதுநிலை மருத்துவ அலுவலர் டாக்டர்.கிரிபிரசாத் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், வருகிற திங்கட்கிழமைக்குள் சம்பளத்தில் பாதித்தொகையும், அடுத்த ஒரு வாரத்திற்குள் மீதமுள்ள தொகையும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து, துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


Related Tags :
Next Story