தசரா விழாவையொட்டி மைசூருவில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள்
தசரா விழாவையொட்டி மைசூருவில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மைசூரு,
தசரா விழாவையொட்டி மைசூருவில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்களின் சேவையை அரசு பஸ் பணிமனை மேலாளர் தொடங்கி வைத்தார்.
சிறப்பு பஸ்கள்
உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. தசரா விழாவைக் காண பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மைசூருவுக்கு வருவார்கள் என்பதால் மைசூருவில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில் 8 அதிநவீன சொகுசு பஸ்களும் அடங்கும். இந்த சிறப்பு பஸ்களின் சேவையை மைசூரு அரசு பஸ் பணிமனை மேலாளர் சீனிவாஸ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தசரா விழா முடியும் நாள் வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
சிம்மாசனம்
இந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) தசரா விழாவின்போது மன்னர் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தும் தங்க, வைர, நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் அரண்மனை அம்பா விலாஸ் அறையில் வைத்து ஜோடிக்கப்பட உள்ளது. முன்னதாக சிம்மாசனத்தின் 8 பாகங்களும் முறைப்படி எடுத்து வரப்பட்டு அம்பா விலாஸ் அறையில் வைக்கப்படுகின்றன.
பின்னர் காலை 7.45 மணி முதல் 8.45 மணிக்குள் நவக்கிரக பூஜை, ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. காலை 9.45 மணி முதல் 10.15 மணிக்குள் சாந்தி பூஜை நடத்தி சிம்மாசனம் அரண்மனை வாரிசான யதுவீர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில் ஜோடிக்கப்படுகிறது. பின்னர் அது தசரா விழா தொடங்கும் வரை வெள்ளைத் துணியால் மூடி வைக்கப்பட உள்ளது.

Related Tags :
Next Story