துர்கிகுடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
துர்கிகுடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் லோகேஷ் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.
சிவமொக்கா,
துர்கிகுடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் லோகேஷ் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
கலெக்டர் ஆய்வு
சிவமொக்கா டவுன் துர்கிகுடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு நேற்று திடீரென மாவட்ட கலெக்டர் லோகேஷ் வந்தார். அவர் பள்ளி வளாகத்தை சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், மாணவர் களிடம் பள்ளியில் உள்ள குறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஆசிரியர்கள் போதிக்கும் முறை குறித்தும், தரமற்ற முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
அப்போது மாணவர்கள் பல ஆசிரியர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினர். அதைக்கேட்டு கலெக்டர் மனவேதனை அடைந்தார். பின்னர் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதையடுத்து சீருடை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள், ஒழுங்கீன முறையில் நடந்து கொண்ட மாணவர்கள் ஆகியோரை கண்டித்தார். பின்னர் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அனைத்து அரசு பள்ளிகளிலும்...
அதன்பின்னர் நிருபர்களுக்கு கலெக்டர் லோகேஷ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு பள்ளிகளின் தரம் குறைந்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதனால்தான் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சோதனை நடத்தப்படும். அரசு பள்ளிகளில் உள்ள குறைபாடுகள் களையப்படும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனை ஆகியவை சார்பில் 4 நாட்கள் ‘வாழ்க்கையின் மகத்துவம்’ என்ற தலைப்பில் பயிற்சி முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story