காதல் கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை திசையன்விளை அருகே பரிதாபம்


காதல் கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை திசையன்விளை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 20 Sep 2017 9:00 PM GMT (Updated: 2017-09-20T18:45:49+05:30)

திசையன்விளை அருகே, காதல் கணவர் பிரிந்து சென்ற மனவேதனையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திசையன்விளை,

திசையன்விளை அருகே, காதல் கணவர் பிரிந்து சென்ற மனவேதனையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் தினகர். கீழநந்தன்குளத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி(வயது 35). இவர்கள் இருவரும் திசையன்விளையில் உள்ள ஒரு மணல் ஆலையில் ஒன்றாக கூலி வேலை பார்த்து வந்தனர். ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் இடையே சாதாரணமாக ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மலர்ந்தது. இருவரும் உயிருக்குயிராக காதலித்து வந்தனர்.

அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்துக் கொண்டதால் திருமணத்துக்கு முன்பே முத்துலட்சுமி கர்ப்பம் அடைந்தார். முத்துலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. முத்துமதி என்ற அந்த பெண் குழந்தைக்கு 4 வயது ஆகிறது.

கணவர் பிரிந்து சென்றார்

திருமணம் ஆன சில மாதங்களில் தினகர் தான் காதலித்து திருமணம் செய்த மனைவியையும், தனக்கு பிறந்த குழந்தையையும் விட்டு விட்டு பிரிந்து சென்று விட்டார்.

கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதால் முத்துலட்சுமி தனது குழந்தையுடன் கீழநந்தன்குளத்தில் உள்ள தனது தாய் முத்தம்மாள் வீட்டில் வசித்து வந்தார். பிரிந்து சென்ற கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ வராததாலும், குழந்தையின் எதிர்காலத்தை எண்ணியும் முத்துலட்சுமி மிகுந்த வேதனையில் இருந்து வந்தார்.

தீக்குளித்து தற்கொலை

இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த முத்துலட்சுமி நேற்று காலை தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story