கலெக்டர் அலுவலகத்தில் காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தில் காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-21T01:10:24+05:30)

மதுரை ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்கள்.

மதுரை,

மதுரை ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்கள். அவர்கள் தங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை கூறியும் பலன் இல்லை, அதனால் சீராக குடிநீர் வழங்க வேண்டும் எனக் கோரி காலிகுடங்களுடன் அமர்ந்து முற்றுகையிட்டனர்.

 பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரியிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் ஆவன செய்வதாக தெரிவித்தார்.


Next Story