மும்பை விமான நிலைய ஓடுபாதையில் விபத்து 6 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன


மும்பை விமான நிலைய ஓடுபாதையில் விபத்து 6 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன
x
தினத்தந்தி 20 Sep 2017 10:15 PM GMT (Updated: 2017-09-21T01:38:13+05:30)

மும்பை விமான நிலைய பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்து கொண்டு இருந்ததால் ஒரு விமானம் தரை இறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்தில் சிக்கியது.

ஆலந்தூர்,

இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டிய லண்டன், சிங்கப்பூர், மலேசியா, குவைத் உள்பட 6 விமானங்கள் அங்கு தரை இறங்க முடியாமல் சென்னை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.

இது போல் சென்னையில் இருந்து மும்பைக்கும், பின்னர் மும்பையில் இருந்து சென்னைக்கும் வரவேண்டிய விமானங்களும் தாமதமாக சென்று வந்தன. மும்பை விமான நிலையத்தில் நிலைமை சீரானதும் சென்னையில் தரை இறங்கிய 6 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மும்பைக்கு புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story