பாதாள சாக்கடை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முற்றுகையிட்ட ம.தி.மு.க.வினர் 40 பேர் கைது


பாதாள சாக்கடை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முற்றுகையிட்ட ம.தி.மு.க.வினர் 40 பேர் கைது
x
தினத்தந்தி 20 Sep 2017 11:15 PM GMT (Updated: 20 Sep 2017 8:31 PM GMT)

பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முற்றுகை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 40 பேரைபோலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம் உயர் தொழில் நுட்பம் இல்லாமல் தரமற்றதாகவும், திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி பொள்ளாச்சி நகர ம.தி.மு.க.சார்பில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை, ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பொள்ளாச்சி வெங்கடேஸ்வரா காலனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ம.தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு நகராட்சி அலுவலகம் நோக்கி வந்தனர். நகராட்சி அலுவலகம் முன்பு வந்தபோது அவர்களை போலீசார் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர்.

இதனால் அலுவலகத்திற்குள் சென்று ம.தி.மு.க.வினர் போராட்டம் நடத்த முடியவில்லை. இதையடுத்து, நகராட்சி நுழைவு வாயில் முன்பே முற்றுகை நடத்தி பின்பு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் துரைபாய் தலைமை தாங்கினார். மாவட்ட செயலளர் குகன் மில் செந்தில்முன்னிலை வகித்தார். மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட மாணவரணி துணைஅமைப்பாளர்கள் விக்னேஷ், சேதுபதி, இளைஞரணி துணைமோகனசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் கல்யாணி, திருமலைசாமி, சிங்கை சக்தி,நகர துணை செயலாளர் மறுமலர்ச்சி முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ம.தி.மு.க.வினர் 40 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ளபோலீஸ் திருமண மண்டபத்தில்காவலில் வைத்தனர்.

முன்னதாக மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:– பொள்ளாச்சி நகரப் பகுதியில்ரூ.110 கோடியில் நடந்து வரும்பாதாள சாக்கடை திட்டத்தில் எந்தவிதமான உயரிய தொழில்நுட்பமும் கடைப்பிடிக்கப்படவில்லை. நீண்ட கால பயன் தரக்கூடியவகையில், தரமான பணிகள்நடைபெறவில்லை. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட இடங்களில் பணிகள்முடிந்தும் மூடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளன.இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயங்கர முறைகேடு நடந்துள்ளது. தகுதி இல்லாத ஒப்பந்ததாரரால்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து உயர் அதிகாரிகள்ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தரமான முறையில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறுஅவர் கூறினார்.


Next Story