வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்


வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2017 10:30 PM GMT (Updated: 2017-09-21T02:50:08+05:30)

வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழையை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்துறை மண்டல அலுவலர்கள் அடங்கிய குழுக்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன் தலைமை தாங்கி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்ட 29 இடங் களில் மீட்பு பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் வகையில் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். நிவாரண மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளதையும், அடிப்படை வசதிகள் போதுமான அளவில் உள்ளதையும் உறுதி செய்திட வேண்டும் என்று கூறினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் மோகனராஜன் (அரியலூர்), டீனாகுமாரி (உடையார் பாளையம்), தனித்துணை கலெக்டர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல்துறை யினர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். 

Next Story