விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2017 10:45 PM GMT (Updated: 2017-09-21T02:50:09+05:30)

பொய்யாதநல்லூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது பொய்யாதநல்லூர் கிராமம். இங்கு உள்ள பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் நடை பெறும் மாநாடுக்காக பதாகை வைத்து இருந்தனர். இந்த பதாகையை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் யாரோ கிழித்ததாக தெரிகிறது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று அரியலூர்-செந்துறை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையையடுத்து போலீசார் நீங்கள் புகார் கொடுத்தால் உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்- செந்துறை சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story