நில முறைகேடு புகாரில் ஏக்நாத் கட்சேயிடம் விசாரணை?


நில முறைகேடு புகாரில் ஏக்நாத் கட்சேயிடம் விசாரணை?
x
தினத்தந்தி 21 Sep 2017 12:15 AM GMT (Updated: 2017-09-21T03:25:58+05:30)

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மந்திரிசபையில் வருவாய்த்துறை மந்திரியாக பதவி வகித்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, நில முறைகேடு புகாரில் சிக்கி பதவியை இழந்தார்.

நாசிக்,

இந்த வழக்கு குறித்து நாசிக் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சூழலில், நேற்று திடீரென நாசிக் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு ஏக்நாத் கட்சே வந்தார். சூப்பிரண்டு பஞ்சப்ராவ் உகாலேயை சுமார் 1½ மணிநேரம் சந்தித்து பேசினார்.

அப்போது, நில முறைகேடு புகாரின்கீழ், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஏக்நாத் கட்சே திடீரென நாசிக் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு வந்தது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story