மோட்டார்சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை விபத்தில் பலி


மோட்டார்சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை விபத்தில் பலி
x
தினத்தந்தி 20 Sep 2017 11:49 PM GMT (Updated: 2017-09-21T05:19:27+05:30)

பாலசமுத்திரம் மண்டலம் கிருஷ்ணதிம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியய்யாவின் மகன் குருமூர்த்தி (வயது 26). இவருக்கு, திருமணம் முடிந்து 20 நாட்கள் ஆகிறது.

ஸ்ரீகாளஹஸ்தி,

பாலசமுத்திரம் மண்டலம் கிருஷ்ணதிம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியய்யாவின் மகன் குருமூர்த்தி (வயது 26). இவருக்கு, திருமணம் முடிந்து 20 நாட்கள் ஆகிறது. அதேபகுதியைச் சேர்ந்த ராகவய்யாவின் மகன் ஜீவா (35). நண்பர்களான இருவரும், நேற்று முன்தினம் கிராமத்தில் இருந்து ஒரு மோட்டார்சைக்கிளில் சித்தூருக்குப் புறப்பட்டனர்.

பாலசமுத்திரம் மண்டலம் ரங்காபுரம் பகுதியில் ஒரு வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக எதிரே வந்த ஆந்திர மாநில அரசு பஸ் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் புதுமாப்பிள்ளை குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். நண்பர் ஜீவா படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து சித்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story