திருக்குறள் பற்றி வினோபா


திருக்குறள் பற்றி வினோபா
x
தினத்தந்தி 23 Sep 2017 9:55 AM GMT (Updated: 2017-09-23T15:24:58+05:30)

வினோபா பவே தமிழ்நாட்டில் பேசும்போதெல்லாம், திருக்குறளையும் தேவாரத்தையும் குறிப்பிடாமல் பேசியதில்லை.

“மனிதனின் மூளைக்கு எட்டியபடி கணக்கிட்டால், ஆங்கில இலக்கியங்களுக்கு வயது 800, அமெரிக்க இலக்கியங்களுக்கு வயது 400. ஆனால் திருக்குறளுக்கு வயது 2 ஆயிரம் ஆண்டுகள். 800 ஆண்டுகள் வயதுடைய ஆங்கில இலக்கியங்கள் இந்தக் காலத்துக்குப் பொருந்தவில்லை. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளில் நான் மிகப் பெரிய ஜீவனைக் காண்கிறேன். இப்போது உலகெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிற பஞ்சசீலக் கொள்கையையும் நான் திருக்குறளில் காண்கிறேன். இத்தகைய திருக்குறளை உருவாக்குவதற்கு அதற்கு முன் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தமிழுக்கு வயது இருந்திருக்க வேண்டும்!’’ என்று சொன்னவர், வினோபா பவே. அதோடு அவர் தமிழ்நாட்டில் பேசும்போதெல்லாம், திருக்குறளையும் தேவாரத்தையும் குறிப்பிடாமல் பேசியதில்லை.

Next Story