நெல்லை மாவட்டத்தில் சிறப்பு ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வை 3,817 பேர் எழுதினர்


நெல்லை மாவட்டத்தில் சிறப்பு ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வை 3,817 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 23 Sep 2017 9:30 PM GMT (Updated: 23 Sep 2017 1:00 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நடந்த சிறப்பு ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வை 3,817 பேர் எழுதினார்கள்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நடந்த சிறப்பு ஆசிரியர்களுக்கான எழுத்து தேர்வை 3,817 பேர் எழுதினார்கள்.

சிறப்பு ஆசிரியர்கள்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வு நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த தேர்வை நடத்தக்கூடாது என்று கூறி சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் இந்த தேர்வுக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. இதைத்தொடர்ந்து அந்த தடையை விலக்கி உத்தரவிட்டது.

3,817 பேர் எழுதினர்

இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணிக்கு நெல்லை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 39 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நெல்லை மாவட்டத்தில் நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வு மையங்களில் நேற்று 3 ஆயிரத்து 817 பேர் தேர்வு எழுதினார்கள்.

இந்த தேர்வு மையங்களை அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் பாலமுருகன், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தனமணி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.


Next Story