மாவட்ட செய்திகள்

தாம்பரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது + "||" + harassing to baby girl person Arrested

தாம்பரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

தாம்பரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
திருச்சியை அடுத்த மணப்பாறையை சேர்ந்த சுல்தான் (வயது 40) ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

தாம்பரம்,

தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர் குண்டு மேடு, அன்புநகர் பகுதியை சேர்ந்த 10 வயது மாணவி கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தாள். குண்டு மேடு பகுதியில் உள்ள மசூதியில் திருச்சியை அடுத்த மணப்பாறையை சேர்ந்த சுல்தான் (வயது 40) ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று மசூதி அருகில் உள்ள மதரசாவிற்கு அரபி கற்றுக்கொள்வதற்காக அந்த மாணவி வந்தாள். அப்போது சுல்தான் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து சுல்தானுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

அவரை தாம்பரம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுல்தானை கைது செய்தனர்.