ஓடும் பஸ்சில் பெண் போலீசிடம் கைப்பையை திருட முயற்சி கையும், களவுமாக இளம்பெண் சிக்கினார்


ஓடும் பஸ்சில் பெண் போலீசிடம் கைப்பையை திருட முயற்சி கையும், களவுமாக இளம்பெண் சிக்கினார்
x

பெங்களூருவில், ஓடும் பஸ்சில் பெண் போலீசிடம் கைப்பையை திருட முயன்ற இளம்பெண் கையும், களவுமாக சிக்கினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெங்களூரு,

பெங்களூரு மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும் ஒரு பெண் போலீஸ், கடந்த 25-ந் தேதி அரசு(பி.எம்.டி.சி.) டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பஸ்சில் பயணம் செய்த ஒரு இளம்பெண், பெண் போலீசின் கைப்பையை திருட முயன்றார். இதைப்பார்த்த பெண் போலீஸ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் சத்தம்போட்டார். இதையடுத்து ஓடும் பஸ்சில் இருந்து இறங்கி அந்த இளம்பெண் தப்ப முயன்றார். இதையடுத்து பெண் போலீஸ், சக பயணிகளின் உதவியுடன் அந்த இளம்பெண்ணை கையும், களவுமாக பிடித்தார்.

பின்னர் அந்த இளம்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் சுமித்ரா(வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுமித்ராவை, கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து அந்த பெண் போலீஸ் புகாரும் அளித்தார். அதன்பேரில் கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்ராவை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சில் பெண் போலீசிடம் கைப்பையை திருட முயன்று இளம்பெண் கையும், களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story