56 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு தசரா விழாவில் கர்ப்பிணியாக பங்கேற்ற இளவரசி


56 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு தசரா விழாவில் கர்ப்பிணியாக பங்கேற்ற இளவரசி
x
தினத்தந்தி 1 Oct 2017 5:00 AM IST (Updated: 1 Oct 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

1600–ம் ஆண்டில் மைசூருவை ஆண்ட ராஜ உடையார், விஜயநகரம் மீது போர் தொடுத்தார். திருமலா ராஜாவிடம் இருந்து விஜயநகரை கைப்பற்றிய ராஜ உடையார்,

மைசூரு,

தனது ஆட்களை தலக்காடுவில் உள்ள மாலங்கி கிராமத்திற்கு அனுப்பினார். அங்கு தான் திருமலா ராஜாவின் மனைவி அலமேலம்மா வாழ்ந்து வந்தார். மாலங்கி கிராமத்திற்கு தனது ஆட்களை அனுப்பிய ராஜ உடையார், மாலங்கி கிராமத்தையும் கைப்பற்றினார். ராஜ உடையாரிடம் சரணடைய மறுத்த அலமேலம்மா, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு 3 சாபங்கள் விட்டார். அதாவது, தலக்காடு மணல்மேடாக மாற வேண்டும், மாலங்கி ஆற்றில் சுழல் ஏற்பட வேண்டும்.

மைசூரு அரச குடும்பத்தினருக்கு குழந்தை பாக்கியம் இருக்கக் கூடாது என்பதாகும். அன்று முதல் மைசூரு அரச குடும்பத்தில் யாருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. மன்னர் வாரிசை தத்தெடுத்து முடிசூடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2015–ம் ஆண்டு மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் மனைவியும், மகாராணியுமான பிரமோதா தேவி, யதுவீரை தத்தெடுத்து மன்னராக முடிசூடினார். மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கும், ராஜ்கோட் ராஜ குடும்பத்தை சேர்ந்த திரிஷிகா குமாரிக்கும் கடந்த ஆண்டு (2016) திருமணம் நடந்தது. இந்த நிலையில், இளவரசி திரிஷிகா குமாரி கர்ப்பமடைந்தார். இதனால் மன்னர் குடும்பத்தினர் மீதான சாபம் நீங்கியதாக பேசப்படுகிறது.

அவருக்கு இந்த ஆண்டு இறுதியில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மைசூரு தசரா விழாவில் கர்ப்பிணியாக பங்கேற்கும் 3–வது இளவரசி என்ற பெருமையை திரிஷிகா குமாரி பெற்றுள்ளார். அத்துடன் 56 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு தசரா விழாவில் கர்ப்பிணியாக பங்கேற்ற இளவரசி என்ற பெருமையை திரிஷிகா குமாரி பெற்றுள்ளார். முன்னதாக, கடந்த 1890–ம் ஆண்டு மகாராணி வாணி விலாஸ் சன்னிதானா, 1961–ம் ஆண்டு மகாராணி திரிபுரா சுந்தரி அம்மணி ஆகியோர் கர்ப்பிணியாக தசரா விழாவில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story